ஜனநாயத்துக்கான முக்கியமான அம்சம் கருத்துசுதந்திரமே ஆகும்! ஜூலி சங் வலியுறுத்து
கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா
வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்து சுதந்திரத்துக்குள்ள உரிமையே ஜனநாயகத்துக்கான முக்கியமான அம்சம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையை மீளகட்டியெழுப்பும் ஸ்திரமானதாக்கும் இந்த அடிப்படை உரிமை
பாதுகாக்கப்படுதல் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












கருத்துக்களேதுமில்லை