விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் சலுகை! விவசாய அமைச்சர் உறுதி

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது 19 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.வி.பி உரம் மூடையொன்றின் விலையை 4 ஆயிரத்து 500 ரூபாவால் குறைத்து 15 ஆயிரம் ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதுடன், உர நிவாரணமாக வழங்கப்படும் நிதியை அடுத்த போகம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவது தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விவசாயிகள் தமக்குத் தேவையான உரங்களை எந்தப் பிரதேசத்திலும் கொள்வனவு செய்து கொள்ள முடியும் எனவும், 25 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்த கேள்வி கோரல் பத்திரம் கோரப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.