யாழ்.அச்சுவேலி விவசாயியால் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் கண்டு பிடிப்பு!

வெங்காயச் செய்கையை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றை யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

குறித்த விவசாயி லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களைக் குறைத்து வெங்காயத்தை நடுகை செய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ளார்.

இதனூடாக வெங்காயத்தை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் நிலங்களில் வெங்காயத்தை நடுகை செய்து வெற்றி கண்டுள்ளார்.

இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக வடமாகாண விவசாய பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் நேற்று (வெள்ளிக்கிழமை) நடுகை செய்யும் முறை காண்பிக்கப்பட்டது.

குறைத்த நடுகை முறை வெற்றி அளிக்கும் முறையாக விவசாய அமைச்சால் அங்கீகரிக்கப்பட்டால் அதனை அனைவருக்கும் பரிந்துரைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி, முன்னாள் விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் விவசாய அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.