கொழும்பில் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க வேலைத்திட்டம்! அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு என்கிறார் பிரசன்ன

 

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்கும் நிலையான நீண்டகால தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவைப் பத்திரமொன்றை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனத்தால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாநகரப் பகுதியிலும், கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் வெள்ளத்தை தணிக்கும் திட்டங்களை இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் அடையாளம் கண்டுள்ளதாகவும் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்வருடம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2,100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பல கட்டங்களாக செயற்படுத்தப்படவுள்ளது.

களனி கங்கை பெருக்கெடுப்பதன் காரணமாக கொலன்னாவை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கொலன்னாவை மழை நீர் வடிகால் மற்றும் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தி மக்களை அந்த நிலையிலிருந்து விடுவிப்பதில் முன்னுரிமை அளித்து இந்தத்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.