பேஸ்புக் மூலம் பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை..T

தம்புத்தேகம பிரதேசத்தில் மரப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, மரப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக பணம் கொடுத்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.

பேஸ்புக் மூலம் பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை..T

இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் விளம்பரம்
மரப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பேஸ்புக்கில் வெளியான விளம்பரத்தைப் பார்த்த பெண், விளம்பரத்தை வெளியிட்ட பெண்ணிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, மரப் பொருட்களின் விலை குறித்து விவாதித்துள்ளார்.

விரும்பிய மர அலமாரி, கட்டில் மற்றும் பல பொருட்களை பெறுவதற்காக, விளம்பரத்தை வெளியிட்ட பெண் கடந்த 7 நாட்களுக்கு முன்பு தம்புத்தேகம நகரிலுள்ள வங்கியொன்றில் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாவை வைப்பிடுமாறு கூறியுள்ளார்.

அதற்கமைய, பணம் அனுப்பிய பெண் மரப் பொருட்களை எப்போது அனுப்புவீர்கள் என வினவிய போது மரப் பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதாகவும் அதனால் மேலும் 20ஆயிரம் வைப்பிடுமாறு கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.