சதிநடவடிக்கைகள் மூலம் சில குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன! ருவான் சாடல்

 

நாட்டில் ஸ்திரதன்மையேற்பட்டுள்ளதால் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்படசில குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன என ஐக்கியதேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தவேளை ஜனாதிபதி பொறுப்பை தற்போதைய ஜனாதிபதி பொறுப்பேற்றார் எனத் தெரிவித்துள்ள அவர், அவ்வேளை ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கும் ஜேவிபி தலைவருக்கும் பிரதமர் பதவியைவழங்க முன்வந்தார். ஆனால் அவர்கள் அனைவரும் அதனை ஏற்க மறுத்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் அதனை ஏற்றுக்கொண்டு நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்படுத்தியுள்ளார். எனினும் எதிர்க்கட்சி உட்பட சில குழுக்கள் சதிவேலை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.