கொழும்பு-15 காக்கைதீவை அழகுபடுத்தல் : நீண்ட காலத்தின் பின் கால்வாயை சுத்தப்படுத்தி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை !

கொழும்பு-15, மட்டக்குளியில் அமைந்துள்ள காக்கைதீவு பகுதியை அழகுபடுத்துவது தொடர்பில் கடந்த மே மாதம் (25-05-2023 )கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் ஆராய்ந்தனர்.

இது தொடர்பாக காக்கைதீவில் இடம்பெற்ற கூட்டத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, காக்கைதீவு பகுதியிலுள்ள கால்வாயை புனரமைத்து சுத்தப்படுத்துவது, காக்கைதீவு கடற்கரைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மெருகூட்டுவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

இந்நிலையில் இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக காக்கை தீவு பகுதியில் நீண்டகாலமாக சுத்தப்படுத்தப்படாமலும் அபிவிருத்தி செய்யாமலும் காணப்படும் கால்வாயை புனரமைப்பது தொடர்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கள ஆய்வுக்காக 19 ஆம் திகதி திங்கட்கிழமை (19-6-2023) குறித்த பகுதிக்கு, கொழும்பு மாநகர, அரச நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறியியலாளர்கள், கொழும்பு மத்திய சுற்றாடல் அதிகாரி மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் மனோகரன் சிதம்பரம் உள்ளிட்டவர்கள் விஜயம் மேற்கொண்டனர்.

இதேவளை இது தொடர்பில் முன்னதாக, 18 ஆம் திகதி மே 2023 அன்று கொழும்பு மாநகர ஆணையாளரால் பூர்வாங்கஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னரே மே 25 ஆம் திகதி 2023 அன்று காக்தைதீவு பகுதி அபிவிருத்தி திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து உயர் அதிகாரிகளும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இதேவேளை, 7 ஜூன் 2023 அன்று கொழும்பு மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் முன்னேற்றக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையிலேயே ஜூன் 19 ஆம் திகதி குறித்த பகுதிக்கு, கொழும்பு மாநகர, அரச நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறியியலாளர்கள், கொழும்பு மத்திய சுற்றாடல் அதிகாரி மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் மனோகரன் சிதம்பரம் உள்ளிட்டவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் மனோகரன் சிதம்பரம் தெரிவிக்கையில்,

“காக்கைதீவு பகுதியை அழகுபடுத்துவதே எனது முக்கிய குறிக்கோளாக அமைந்துள்ளது. அதிலும் நுளம்புகள் அற்ற காக்கை தீவை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கிலேயே கால்வாயை சுத்தப்படுத்தி அவிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நடவடிக்கைக்கான 4 ஆவது கட்ட கூட்டம் இடம்பெற்றுள்ளது. வெகு விரைவில் இந்த நடவடிக்கையை நாம் மக்களுக்காக செயற்படுத்தவுள்ளோம்” என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.