போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபடுவோரை கைதுசெய்ய ஏற்பாடு! பாதுகாப்பு அமைச்சு அதிரடி

 

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்த விசேட வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச்செயல்களை குறைக்கும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த வருடத்தில் இதுவரை 255 கொலைகள் பதிவாகியுள்ளது. கடந்த வருடம் 559 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, கடந்த வருடத்தில் ஏறக்குறைய 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த வருடத்தில் இதுவரை 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.