ஒவ்வொரு முறையும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமற் போகிறது!  உறவுகள் கவலை

ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும் ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இம்முறையாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வரும் தமக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே ஐ.நா. சபை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டடார்.

நீதிக்காகப் போராடிக்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஓ.எம்.பி. அலுவலகத்தை கொண்டுவந்து இழப்பீடு தருவதாகக் கூறப்பட்டுள்ளதே தவிர இதுவரை குறித்த அலுவலகத்தால் எவ்வித பிரயோசனமும் இல்லை ஏறும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு பொறிமுறையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, சர்வதேசம் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றாலும் அவர்கள் தம்மை திரும்பி பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு உள்ளமை வேதனையை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.