நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு இலவச குடிநீர் வழங்கல் வசதி!

மாளிகைக்காடு நிருபர்

குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பால் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸ் நிலைய முன்றிலில் நடைபெற்றது.

அரச காரியாலயங்கள், பாடசாலைகள், மதஸ்தலங்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்தப் பிரதேச சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றிசாட் தலைமையிலான குழுவினர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு இந்த வேலைத்திட்டத்தை நிர்மாணித்து பொலிஸாரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

நிந்தவூர் பொலிஸ் நிலையம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க நிர்மாணிக்கப்பட்ட இந்த வேலைத்திட்ட கையளிப்பு நிகழ்வு நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அல்-மீஸான் பௌண்டஷன் ஸ்ரீPலங்கா தவிசாளர் யூ. எல்.என். ஹூதா உமர், இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பின் இணைப்பாளர்களான எம்.எச். இல்யாஸ், மௌலவி ஏ.பி.எம். சிம்லி மற்றும் அந் நூர் செரிட்டி உத்தியோகாத்தர்கள், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.