நேர்மையான சேவைக்கு பாராட்டும் கௌரவிப்பும்!

நூருல் ஹூதா உமர்

கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு கல்முனை மாநகர சபையின் பிரதான திண்ம கழிவகற்றல் செயற்திட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித்து முழு ஈடுபாட்டுடன் இரவு பகல் பாராது நேர்த்தியான முறையில் தனது சேவைகளை வழங்கி வரும் சுகாதார மேற்பார்வையாளர் எம்.எம். முகமது ரிஸ்வான் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கல்முனையில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி எம். எச். ரிஸ்பின், செயலாளர் எம்.எம்.எம். காமில் மற்றும் அமைப்பின் செயற்குழு, நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் ஒன்றரை லட்சம் ரூபா பணத்தை குப்பை பையில் தவறுலாக போட்டு, அதனை குப்பை சேகரிக்கும் வண்டிக்கு அனுப்பிய ஒருவர், பிறகு அந்தப் பணத்தை பெரும் முயற்களின் பின்னர் பெற்றுக் கொண்ட சம்பவமொன்று கல்முனைப் பிரதேசத்தில் நடந்தது. இந்த பணத்தை இழந்தவர் துரிதமாக மீளப்பெற காரணமாக அமைந்திருந்தவர் இந்த பாராட்டை பெற்ற றிஸ்வான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.