இந்தியா, பாகிஸ்தான் மாத்திரமல்ல பங்களாதேஷுடனும் வர்த்தக உறவுகளை இலங்கை வைத்திருக்க வேண்டும்! நிமல் சிறிபால டி சில்வா திட்டம்

இந்தியா,  பாகிஸ்தான் மாத்திரமல்ல பங்களாதேஷுடனும்  நாம் வர்த்தக உறவுகளை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். சில நிபந்தனைகள் அடிப்படையில், கொழும்பு துறைமுகத்தில் குறித்தவொரு இடத்தை பங்களாதேஸுக்கு வழங்குவதற்கு தான் இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலை இடமாற்றம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதியிடம் கூறினேன். அநேகமான  அரசியல்வாதிகள் சிங்கள பௌத்தர் ஒருவரை பரிந்துரைத்தபோதும், நான் அவ்வாறு கூறவில்லை.

நாம் ஒருவரையொருவர் மதித்து அவர்களின் திறமைகளுக்கு இடமளிக்கும் போது உண்மையான நல்லிணக்கம் வரும்.

பங்களாதேஷில் உள்ள, சித்தகொங் துறைமுகம் எதிர்காலத்தில் மிகவும் வளர்ந்த துறைமுகமாக மாறும். நாங்கள் முஸ்லிம் நாடுகளுடன் நாம் சிறந்த நல்லுறவைக் கொண்டிருப்பதைக் காணலாம். எனினும், சில காலத்திற்கு முன்பு நாம் முஸ்லிம் நாடுகளுடனான உறவுகளை முறையாக மேற்கொள்ளாமல் முறித்துக்கொண்டுள்ளோம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

ஆனால் இப்போது நாம் அந்த இணைப்புகளை உருவாக்குகிறோம், இது நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாத ஒரு விடயமாக மாறும் என பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது மேற்படி தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.