தென்மராட்சி பிக்பாஸ் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரில் நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி சம்பியன்!

யாழ்.தென்மராட்சியை மையப்படுத்தி நடத்தப்பட்ட தென்மராட்சி பிக் பாஸ் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரின் சம்பியன் பட்டத்தை நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி தனதாக்கிக் கொண்டது.

10அணிகள் பங்குபற்றிய மென்பந்து துடுப்பாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழiமை மட்டுவில் வளர்மதி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இறுதிப்போட்டியில் மட்டுவில் சுப்பர் கில்லீஸ் அணியை எதிர்த்து நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணித்தலைவர் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்திருந்தார்.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டுவில் சுப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப் பந்துப் பரிமாற்றங்கள் முடிவில் 6 இலக்குகளை இழந்து 69 ஓட்டங்களை பெற்றது.

அதன்பின்னர் 70 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நாவற்குழி பிக் பூட்டேஸ் அணி துடுப்பெடுத்தாடியது.

அந்த அணியின் துடுப்பாட்ட வீரர் சாகித்தியனின் அதிரடியான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 8 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் மூன்று இலக்குகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து தென்மராட்சி பிக் பாஸ் லீக்கின் சம்பியனை தனதாக்கிக்கொண்டது.

இறுதிப்போட்டியில் 32ஓட்டங்களையும் 2 இலக்குகளையும் சாய்த்த நாவற்குழி பிக் பூட்டேஸ் அணியைச் சேர்ந்த சாகித்தியன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

லீக் தொடரில் சம்பியன் வென்ற நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணிக்கு 5 லட்சம் ரூபா பணப்பரிசும்-இரண்டாம் இடத்தைப் பெற்ற மட்டுவில் சுப்பர் கில்லீஸ் அணிக்கு இரண்டரை லட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து சிறப்பித்திருந்தார்.

மேலும் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகரும் தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிர்வாக இயக்குநருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி. லயன் நிர்மலா மகேந்திரன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.