கிளிநொச்சி உதயநகர் பகுதியில் காரில் சென்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!
கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வீதியில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரோயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை