மாலி நோக்கி புறப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்

ஐக்கியநாடுகள் அமைதிப்படையுடன் இணைந்துகொள்வதற்காக  நன்கு பயிற்றவிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் நேற்று (ஜூலை 01) மாலை மாலி நோக்கி புறப்பட்டனர் .

20 அதிகாரிகள் மற்றும் 150 இதர அணிகள் அடங்கிய இலங்கை இராணுவத்தினர் மாலிக்கு சென்றுள்ளனர்.

 

5 வது இலங்கை சின்ஹா ரெஜிமென்ட் (SLSR), இலங்கை கவசப் படை (SLAC), இலங்கை பொறியாளர்கள் (SLE), இலங்கை சிக்னல் கார்ப்ஸ் (SLSC), இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படைப்பிரிவு (MIR),  ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் பொறியியலாளர் சேவைகள் (CES), இலங்கை இராணுவ சேவைப் படைகள் (SLASC), இலங்கை இராணுவ மருத்துவப் படை (SLAMC), இலங்கை இராணுவ ஆயுதப் படைகள் (SLAOC), இலங்கை மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME), இலங்கை இராணுவப் பொலிஸ் படை (SLEME), SLCMP), இலங்கை இராணுவ பொது சேவைப் படை (SLAGSC) மற்றும் இலங்கை தேசிய காவலர் (SLNG) ஆகியோர் அணிகள் அடங்கிய இலங்கை இராணுவத்தினர்   மாலிக்கு சென்றுள்ளனர்.

.

இதனையடுத்து , SLSR ரெஜிமென்டல் தலைமையக மைதானத்தில் நடைபெற்ற மரியாதை அணிவகுப்பில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.