மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீள தேசிய கட்டுமான விருது!

கட்டுமானத் துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் கட்டுமானத் துறையில் தேசிய விழாவான தேசிய கட்டுமான விருதுகள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் நிர்மாணக் கைத்ததொழில் அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 07, சவ்சிறிபாயவில் அமைந்துள்ள நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 31 ஆவது தடவையாக இவ்விழா நடைபெற்றது.

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக விருது வழங்கும் விழாவை இரண்டு ஆண்டுகளாக நடத்த முடியவில்லை.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், சிவில் இன்ஜினியரிங் திட்டங்கள், கட்டட திட்டங்கள், மின் மற்றும் இயந்திர கட்டுமானம், பசுமை கட்டுமானம் மற்றும் பிராந்திய திட்டங்கள் ஆகிய பிரிவுகளில் 65 விருதுகள் இங்கு வழங்கப்பட்டன.

இந்த தேசிய விருது விழாவின் முதன்மை நோக்கம், இலங்கையில் நிர்மாணத்துறையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நிர்மாணத்துறையில் சிறந்து விளங்குபவர்களை இனங்கண்டு, அந்த சிறப்பை அடைவதற்கு பயன்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மதிப்பிடுவதும், இலங்கையின் நிர்மாணத்துறையின் நிபுணத்துவம் மற்றும் சிறப்பை மதிப்பிடுவதும் ஆகும்.

நிர்மாணக் கைத்தொழில் இலங்கையின் இரண்டாவது பெரிய கைத்தொழில்துறையாகும். உள்நாட்டில், இது தற்போது நாட்டின் பொருளாதாரத்துக்கு கிட்டத்தட்ட 8 வீதம் பங்களிக்கிறது.

2014 ஃ33 ஆம் இலக்க நிர்மாணத் கைத்தொழில் அபிவிருத்திச் சட்டம், நிர்மாணத் துறையில் விரும்பிய இலக்குகளை அடைவதற்கும் அதனை மேலும் முறையாக ஒழுங்குபடுத்துவதற்கும் நிர்மாணத் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையை நிறுவியது. உலகளாவிய தரத்திற்கு ஏற்ப இலங்கையில் நம்பகமான மற்றும் திறமையான கட்டுமானத்துறையை உருவாக்க நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை முயற்சி எடுத்து வருகிறது.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணப்படும் இந்த வேளையில், இந்நாட்டின் நிர்மாணத் கைத்தொழிலைப் பாதுகாத்து, அந்தக் கைத்தொழிலாளர்களை வெளிநாட்டு வர்த்தகங்களுக்கு வழிநடத்துவது காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது. அதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால உத்திகளை அரசு தயாரித்து வருகிறது. நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தியின் மூலம், மிகவும் நம்பிக்கையான மாற்றத்தையும், நாட்டின் விரைவான வளர்ச்சி இலக்குகளையும் அடைவதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்னாண்டோ மற்றும் தெனுக விதானகமகே, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா, நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின்  தலைவர் ஆர்.எச். ருவினிஸ், அதன் பணிப்பாளர் நாயகம் எஸ். அமரசேகர உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.