நீதிபதியிடம் வாங்கிக் கட்டிய ஆளும்கட்சி எம்.பி. வீரசேகர! குருந்தூர்மலையில் சம்பவம்

(விஜயரத்னம் சரவணன்)

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதனவா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இன்று (செவ்வாய்க்கிழமை) நேரடியாக களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகைதந்திருந்தார்.

இந் நிலையில் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத்வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க முற்பட்டார்.

அப்போது அவரது கருத்தை ஏற்க மறுத்த நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாதெனவும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுவதாகவும், அங்கிருந்து சரத் வீரசேகரவை விலகிச் செல்லுமாறும் எச்சரித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.