குற்றவியல் மேல்நீதிமன்ற வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளாம்! வெட்கம் என்கிறார் நீதி அமைச்சர் விஜயதாஸ

குற்றவியல் மேல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர் மற்றும் பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டு வழக்குகளாகும். இலங்கையர் என்ற ரீதியில் இதனையிட்டு வெட்கமடைய வேண்டும்.

நாடளாவிய ரீதியில் உள்ள நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 1127625 வழக்குகள் நிலுவையில் உள்ளன என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு  விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளiமையை நியாயப்படுத்த முடியாது. மொத்த சனத்தொகையில் 10 லட்சம் பேருக்கு 18 நீதிபதிகள் இருக்கின்றமை சிறந்த சூழலல்ல. 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 174 நீதிமன்றங்களை ஸ்தாபிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினார்கள். பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் புதிய நீதிமன்றங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டடத்தொகுதிகளை ஸ்தாபிப்பது சாத்தியமற்றதாகியது.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் புதிதாக 30 நீதிமன்றங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 11 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளது. அத்துடன் வெலிமடை பகுதியிலும் புதிய நீதிமன்றம் இந்த மாதத்துக்குள் ஸ்தாபிக்கப்படும்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிக்கப்பட்டது.உயர்நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 482 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே ஒரு நீதியரசர்  சுமார் 322 வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய வேண்டும்.

நாட்டில் 10 மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் உள்ளன. 20 நீதிபதிகள் சேவையில் உள்ளார்கள். 2022 ஆம் ஆண்டு தரப்படுத்தலுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் 3423 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே  மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி 171 வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய வேண்டும்.

22 சிவில் குற்றவியல் நீதிமன்றங்களில்  6800 வழக்குகளும், குற்றவியல் மேல் நீதிமன்றத்தில் 29,723 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 26,3481 வழக்குகளும், நீதிவான் நீதிமன்றங்களில் 803642 வழக்குகளும்,சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான நீதிவான் நீதிமன்த்தில்  1108 வழக்குகளும்,தொழில் நியாய சபைகளில் 5225 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஆகவே ஒட்டுமொத்தமாக 11 27265  வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றங்கள் வரை 399 நீதிபதிகள் மாத்திரமே சேவையில் உள்ளார்கள். குற்றவியல் மேல் நீதிமன்றங்களில் 5550 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும், 4312 பெண் துஷ்பிரயோக வழக்குகளும் நிலுவையில் உள்ளதையிட்டு இலங்கையர் என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும்.

சட்டங்கள் கடுமையானால் குற்றங்கள் குறைவடையும் என்ற காரணத்தால் கடந்த ஏழு மாத காலத்துக்குள் மாத்திரம் 25 சட்டமூலங்கள் இயற்றிக் கொள்ளப்பட்டன. 3298 மனித படுகொலை வழக்குகளும், 3376 அபாயகர வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஆகவே எதிர்வரும் காலங்களில் இந்த வழக்கு விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.