சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

 

நூருல் ஹூதா உமர்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் பிரதேச செயலக சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்குட்பட்ட 06 வீடுகளுக்கான (7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 03 வீடு, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 03 வீடு) அடிக்கல் நடும் ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலிலும், சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக்கும், அதிதிகளாக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ மஜீத் , சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.ஹிதாயா, கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.பவாஸ், பிரிவுக்கென கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட சமுர்த்தி அமைப்புக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.