புதிய விமானப்படைத் தளபதி உதேனி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில்  இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிக்கு விஜயம் செய்த விமானப்படைத் தளபதியை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய விடயங்கள் தொடர்பாகச் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

இதன் போது, புதிய விமானப்படைத் தளபதியின் நியமனம் தொடர்பாகப் பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.