தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ள அங்கத்தவர்களில் பெரும்பான்மையினர் விருப்பத்தை பெறுவது கட்டாயமாகும்!

தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ள அங்கத்தவர்களில்
பெரும்பான்மையினர் விருப்பத்தை பெறுவது கட்டாயமாகும்!
அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகிறார்

திருத்தப்பட்ட புதிய தொழில் சட்டம் ஊடாக தொழில் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 பேர் வரை அதிகரித்திருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்போகும் திருத்தங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் –

தொழில் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு தற்போது தேவைப்படும் ஆகக்குறைந்த எண்ணிக்கை 7 பேராகும். இதனை திருத்தியமைத்து தொழில் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 100பேர் வரை அதிகரித்திருக்கிறோம்.

இந்த சட்டத்தை அறிமுப்படுத்தும் சந்தர்ப்பத்தில் நாட்டில் மக்கள் தொகை 5,8 மில்லியனாக இருந்தது. தற்போது நாட்டின் சனத்தொகைகை கருத்திற்கொண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணையை உள்வாங்கி இருக்கிறோம்.

அதேபோன்று புதிய தொழில் சட்டத்துக்கு அமைய தொழிற் சங்கம் ஒன்றின் நிறைவேற்றுக்குழுவுக்கு நூற்றுக்கு 25 வீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்தி இருக்கிறோம்.

மேலும் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க முன்னர் சேவை பெறுநர்களை அது தொடர்பில் அறிவுறுத்துதல், தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கி சட்டவிதிகளைத் தயாரித்திருக்கிறோம்.

மேலும் சம்பளத்தில் தொழிற்சங்க அங்கத்துவ கட்டணத்தை குறைத்து தொழிற்சங்கங்களுக்கு அனுப்புவதற்கு சேவை வழங்குனருக்கு கட்டாயமாக்குவோம்.
அதன் பிரகாரம் ஊழியர் ஒருவர் கேட்டுக்கொண்டால் தொழிற்சங்க அங்கத்துவ கட்டணத்தை சம்பளத்தில் பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.