அதிபர் நியமனங்களில் முறைகேடுகள் தரம்பெற்ற அதிபர்கள் சங்கம் விசனம் அதன்சார்பில் வடமாகாண இணைப்பாளர் ரஜீவன் கண்டனம்

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் போது நிகழும் முறைகேடுகள் தொடர்பிலும், சில பாடசாலைகளின் அதிபர்  வெற்றிடங்களை நிரப்புவதில் காணப்படும் வெளித்தலையீடுகள் தொடர்பிலும் தரம் பெற்ற அதிபர்கள் சங்கம் வன்மையான கண்டனத்தைத்  தெரிவித்துக்கொள்கிறது.

– இவ்வாறு வடக்கு மாகாண தரம்பெற்ற அதிபர்கள் சங்க இணைப்பாளர் லயன் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

அதிபர் நேர்முகத்தேர்வின் போது காணப்படும் வெளிப்படையற்ற தன்மை, நியமன நிபந்தனைகளை தமக்கேற்றமை போல மாற்றிக் கொள்ளவது தொடர்பிலும் எமது சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இவ்வாறே வேலணை மத்திய கல்லூரி அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகத் தேர்வில் தரம் 1 அதிபர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் மீளவும் விண்ணப்பம் கோரப்பட்டதன் பின்னணி தொடர்பில் எமது சங்கம் வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன் உடனடியாக கோரப்பட்ட விண்ணப்பத்தை இரத்து செய்து ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் அதிபரை நியமனம் செய்யுமாறு எமது சங்கம் வலியுறுத்துகிறது. இது தவறும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைக்கோ செல்ல எமது சங்கம் தயாராக இருப்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கான காரணத்தைத் தேடும் நாங்கள் வடக்கின் கல்வி அமைச்சின் செயலாளர் நியமனம் தொடக்கம் பாடசாலை அதிபர் நியமனம் வரை திட்டமிடப்படாத நடவடிக்கைகளும் நியமன முறைகேடுகளும் காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் அதிகூடிய உறுப்பினர்களைக் கொண்ட எமது சங்கம் இவ்வாறான முறைக்கேடுகள் தொடர்பில் வன்மையான கண்டணத்தை தெரிவித்துக் கொள்கிறது. – என்றுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.