இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா!

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா திங்கட்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இரு நாள்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்கின்றார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.