புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தகுதியானவருக்கே பதவி கிட்டும்! ஆஷூ மாரசிங்க உத்தரவாதம்

பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு பலவரது பெயர்கள் இருப்பதால் அவர்களில் மிகவும் தகுதியானவர் யார் என தேடிப்பார்க்க வேண்டி இருப்பதாலே புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் காலதாமதமாகி இருக்கிறது.

என்றாலும் தற்பாதுள்ள பொலிஸ்மா அதிபருக்கு நீடிக்கப்பட்டிருக்கும் பதவி காலம் முடிவடைவதற்குள் புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவரை ஜனாதிபதி பரிந்துரை செய்வார் என ஜனாதிபதியின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஆலாசேகர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமைகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து  தெரிவிக்கையில் –

அரசமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவரின் பெயரை அரசமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி பரிந்துரை செய்ய வேண்டும்.

தற்போதுள்ள பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் புதிய பொலிஸ்மா அதிபருக்கான பலவரது பெயர்கள் பட்டியலில் இருக்கிறன.

அதனால் அவர்களில் தகுதியானவர் யார் என்பதை அலசி ஆராய்ந்தே ஜனாதிபதி பரிந்துரை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு சில காலம் தேவைப்படுகிறது. அதனால்தான் புதிய பொலிஸ்மா அதிபர் ஒருரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியலில் இருக்கும் ஒருசிலர் தொடர்பில், அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக சிலர் ஜனாதிபதிக்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறனர்.

அவர்களை நியமிக்க வேண்டாம் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றனர். அதனால் இதுபோன்ற முறைப்பாடுகள் கிடைக்கும்போது அவை தொடர்பாகவும் ஆராய்ந்து பாரக்கவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கிறது.

அதனால் புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதுவரைக்குமே தற்போதுள்ள பொலிஸமா அதிபரின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதத்துக்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.