அம்பாறை கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை!

நூருல் ஹூதா உமர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில், 1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் காணியில் அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசனின் கோரிக்கையின் பேரில் உள்ளூராட்சி அமைப்புகள் ஆதரவுடன் நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.