தலாய் லாமாவின் 88 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு களனிப் பல்கலையில் கருத்தரங்கு!

திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவின் 88 ஆவது ஜனன தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் வகையில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமா தனது 88 ஆவது ஜனன தினம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது . இதற்கான நிகழ்வு களனி பல்கலைக்கழகத்தில்  இடம்பெற்றிருந்தது. திபெத்திய மக்களின் ஆன்மீக மற்றும் மதத் தலைவர் மற்றும் உலகம் முழுவதும் போற்றப்படுகிறார் என்று  இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

தலாய் லாமா பௌத்த கோட்பாட்டின் அடிப்படையில் 100 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பல தலைப்புகளின் அடிப்படையில் எண்ணற்ற போதனைகளை வழங்கியுள்ளார். புத்தரின் போதனைகளிலிருந்து எழுந்த பெரும் கருணையின் அடிப்படையில் மற்றும் அஹிம்சையின் மாறாத கொள்கையைப் பின்பற்றி, தலாய் லாமா அவரது தனித்துவமான அமைதித் திறனுக்காக 1989 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

உலகம் முழுவதிலுமிருந்து வரும் மில்லியன் கணக்கான தலாய் லாமாவின் அபிமானிகள் மற்றும் பக்தர்கள் அவரது 88 ஆவது பிறந்தநாளை பல்வேறு நாடுகளில் கொண்டாடினர். களனிப் பல்கலைக்கழகத்தின் மனிதவள பீடம், சமூக விஞ்ஞான பீடம், பாலி மற்றும் பௌத்த கற்கைகள், தத்துவவியல் திணைக்களம், சமஸ்கிருதம் மற்றும் கிழக்கு கற்கைகள் திணைக்களம், பௌத்த சகோதரத்துவத்துக்கான அறக்கட்டளை மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனம் இணைந்து ஒரு சர்வதேச அறிவுசார் கருத்தரங்கை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.