வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை யாழ்ப்பாணத்திலுமாம்! 15, 06 இல் என அமைச்சர் மனுஷ நற்செய்தி

வடக்கும் தெற்கும் சமமாக நடத்தப்படும் என்ற செய்தியுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான க்லோபல் பெயார் (புடழடியட குயசை) 2023 எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

தெற்கில் ஆரம்பிக்கப்பட்ட க்லோபல் பெயார் 2023 வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

சர்வதேசத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல, இலங்கையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல, இலங்கை தொழிலாளியை உலகிற்கு கொண்டு செல்ல, உலக அறிவை இலங்கைக்கு கொண்டு செல்ல, இந்த க்லோபல் பெயார் நாங்கள்  ஆரம்பித்துள்ளோம்.

நாங்கள் தெற்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள். நாங்கள் தென்பகுதி அரசியல்வாதிகள் என்று சிலர் நினைக்கிறார்கள்.

ஆனால் எங்களுக்கு வடக்கு, தெற்கு என்ற வித்தியாசம் இல்லை. நாங்கள் முழு நாடாக வேலை செய்கிறோம். வடக்கிற்கு நடக்கும் அநீதிகள் பற்றி பேசும் இந்த சந்தர்ப்பத்தில், தெற்கில் சோதனை திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட முதல் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.

இதன் ஊடாக ஆள் கடத்தலைத் தடுப்பதற்கு, பல்வேறு கடத்தல்களில் சிக்குபவர்களை அதில் இருந்து தடுக்கவும், பயிற்சி பெறாமல் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதற்கு பதிலாக  பயிற்றப்பட்டவர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவும், வெளிநாட்டு தெழிலுக்கு செல்லும்போது  தேவையான விழிப்புணர்வு வசதிகளை ஏற்படுத்தவும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்து எமது அமைச்சின் மூலம் நீங்கள் பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியுமான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

பயிற்சிகள், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினைகள், வெளிவிவகார அமைச்சு தொடர்பான விடயங்கள், வெளியுறவு அமைச்சின் கன்சியூலர் பிரிவு சேவைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்த்தர்ப்பம் இதன் மூலம் கிடைக்கப்பெறும்.

இந்த நடமாடும் சேவையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  தொழில் திணைக்களம் எம்முடன் வருவதுடன் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவி  சமூக சேவை வாய்ப்புகளை வழங்குகின்றோம். அத்துடன் வெளிவிவகார அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் எம்முடன் கைகோர்த்து வருகின்றன.

மேலும் யாழ்பாணத்துக்கு சென்று தமிழ் மொழி பேசும் மக்களுக்கு அந்த மொழியிலேயே தேவையான சேவைகள் பெற்றுக்கொடுக்கப்படும்.

உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குகிறோம். பயிற்சி பெற்ற இருந்தபோதும் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பயிற்சி அதிகாரசபை ஊடாக பயிற்சி சான்றிதழ் வழங்குவோம். விசேட தேவையுடையோர் தொடர்பாகவும் தேவையான சேவைகளை வழங்க இருக்கிறோம்.

அத்துடன் இந்த நடமாடும் சேவையில் கலந்துகொள்பவர்கள் இணையவழியில் பதிவு செய்துகொள்ளவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

இவர்கள் பதிவு செய்துவிட்டு தங்களின் கியூ.ஆர். அட்டையுடன் நடமாடும் சேவை இடம்பெறும் இடத்துக்கு நேரடியாக சென்று இலகுவாக சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

எனவே ஒரே நாடு ஒரே தேசம் ஒரு நாட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒரேமாதிரி நாங்கள் கவனிக்கிறோம் என்ற செய்தியை க்லோபல் பெயார் ஊடாக நாங்கள் எடுத்துச்செல்வோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.