கொழும்பை வந்தடைந்த பிரான்ஸ் கடற்படை கப்பல் “லோரெய்ன்”
பிரான்ஸ் கடற்படைக் கப்பலான லோரெய்ன் இன்று காலை (ஜூலை 11, 2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
142.20 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பல் 154 பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு வான்-பாதுகாப்பு பல்நோக்கு போர்க்கப்பல் ஆகும்.
இதேவேளை, குறித்த கப்பலின் கட்டளை தளபதி இன்று கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார்.
இலங்கையில் தரித்து நிற்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 15 ஆம் திகதி பிரான்ஸ் கடற்படைக் கப்பலான லோரெய்ன் இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.























கருத்துக்களேதுமில்லை