விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்படட் சலுகை..T

விசேட தேவையுடைய மாணவர்களையும் அரச பாடசாலைகளின் சாதாரண வகுப்புக்களில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் நீலமணி மலவீஆராச்சி தெரிவித்துள்ளார்.

வலயங்களிலுள்ள பணிப்பாளர்களின் அனுமதியுடன் விசேட தேவையுடைய மாணவர்கள் வகுப்புகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்படட் சலுகை | Concession For Students With Special Needs

விசேட தேவையுடைய மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் இணைத்துக்கொள்ளப்படுவது வரலாற்றில் முதல் தடவை என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வரப்பிரசாதமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேட தேவையுடைய மாணவர்கள் இதுவரை சிறப்பு பிரிவுகளிலேயே கல்வி கற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் நீலமணி மலவீஆராச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.