மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்துக் கொள்வனவு: அரசாங்கம் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்! சன்ன ஜயசுமன வலியுறுத்து

மருந்து இறக்குமதி விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளின் உண்மை தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

இது அலட்சியப்படுத்தும் விடயமல்ல,தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபையை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது –

அவசர மருந்து கொள்வனவைத் தொடர்ந்து சுகாதாரத்துறை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சுகாதார சேவைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கை;கு பாதிப்பு ஏற்பட்டால் அது மாறுப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மருந்து தட்டுப்பாடு,தரமற்ற மருந்து பயன்பாடு தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் துறையின் அதிகாரிகள் குறிப்பிடும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

மருந்து இறக்குமதி விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளின் உண்மை தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

இதனை அலட்சியப்படுத்த முடியாது. தேசிய ஒளடதங்கள்; கண்காணிப்பு அதிகார சபையை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்கத் தீர்மானித்துள்ளோம்.

தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் முறையாக இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

அரசியல் பரிந்துரைகளுடன் முக்கிய பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த தவறை முதலில் திருத்திக் கொள்ள வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.