துருக்கியில் தடையான பயங்கரவாத அமைப்பு இலங்கையில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளதாம்! துருக்கி தூதுவர் கூறுகின்றார்

துருக்கியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என இலங்கைக்கான துருக்கி தூதுவர் டெமெட் செகெர்சியோ குளு தெரிவித்துள்ளார்.

2016 சதிப்புரட்சிக்கு காரணமான ஃபெத்துல்லாஹிஸ்ட் என்ற அமைப்பே இலங்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என துருக்கி தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் துருக்கியும் இணைந்து முன்னெடுத்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மூலம் தனது நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை இலங்கையிலிருந்து அகற்ற முடிந்துள்ளதாக துருக்கி தூதுவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான வலுவான விழிப்புணர்வையும் பதில்நடவடிக்கையையும் கட்டியெழுப்புவதற்காக  இலங்கையுடன் துருக்கி புலனாய்வுத் தகவல்களை பரிமாறிவருகின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.