வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி! கட்டாயமாக்கப்படும் காப்புறுதி..T

வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள பணத்திற்கு ஆபத்து என பல தரப்பினரும் கூறிவந்த நிலையில் இந்த விடயம் சர்ச்சை நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

வங்கிகள் விசேட நியதிகள் சட்டம்

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி! கட்டாயமாக்கப்படும் காப்புறுதி | Bank Loan In Sri Lanka Bank Deposits Dollar Rate

மேலும் தெரிவிக்கையில், வங்கிகள் விசேட நியதிகள் சட்டமானது முழு நாட்டினதும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் இதன்மூலம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

முன்பு இல்லாத வகையில் பலமான சட்ட ஏற்பாடுகளை தயாரித்து அதனை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எமது நாட்டில் 5 கோடியே 72 இலட்சம் வங்கி வாடிக்கையாளர்கள் காணப்படுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.