அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் கிழக்கு ஆளுநருடன் கைக்கோர்த்தது!
அபு அலா –
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளன தலைவர் வைத்தியர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கேக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் முன்னெடுக்கப்படும் சேவைகளுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், ஆளுநரால் சுகாதார துறைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் தங்களுடைய சேவைக்காக தங்களை முழுமையாக அற்பணிப்பதற்காக ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்ததோடு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
கருத்துக்களேதுமில்லை