அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கணக்காளராக ஜவாஹீர் பதவியேற்பு

 

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவையில் முதலாம் தர உத்தியோகத்தரான யூ.எல்.ஜாவாஹிர் புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

05 ஆம் குளனியை பிறப்பிடமாகவும், மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், இலங்கை கணக்காளர் சேவையில் 2008 ஆம் ஆண்டு உள்ளீர்க்கப்பட்டு அம்பாறை மாவட்ட செயலகம், இறக்காமம், நாவிதன்வெளி, காரைதீவு பிரதேச செயலகங்களில் கணக்களராக கடமையாற்றியுள்ளார்.

இந்தக் கடமையேற்கும் நிகழ்வில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப் ரகுமான், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கணக்காளர் எம்.ஆர் நஸீஹா, திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம் பாரூக்,தர நிர்ணய முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் ஹாரீஸ்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர்,சாய்ந்தமருது நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.ரம்சான் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா உட்பட வைத்தியர்கள், தாதிமார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எல்லோருடனும் சாந்தமாகவும், அன்பாகவும், பண்பாகவும் பணிவாகவும் பழகக்கூடிய இவர் ஆளுமைமிக்க ஒரு சிறந்த நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.