வட மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தன…T

வட மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் கூட்டாக இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தன.

*அன்னலிங்கம் அன்னராசா
(செயலாளர் ,ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சாமாசம்)

*எம்.வி சுப்பிரமணியம்
(தேசிய அமைப்பாளர்,அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு)

*மடுத்தீன் பெனடிக்ற்
((தலைவர்,மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் சங்கம்)

*இ.சந்திரமௌலி
(உப தலைவர் ,கரைச்சி வடக்கு மீனவர் சமாசம்)

வட மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தன..T

ஜனாதிபதி அவர்கள் மோடியுடன் பேச்சுக்கு செல்லும்போது வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை அழுத்தாக பேசவேண்டும்.

2016 ஆம் ஆண்டு டெல்லியில் உயர்மட்ட பேச்சு நடைபெற்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனை அமுல்படுத்த அழுத்தம் கொடுக்கவேண்டும். புதிதாக பேச்சு தேவையில்லை.

கடல் அட்டைப்பண்ணையால் சீனா எமது கடலை ஆக்கிரமித்துள்ளது. ஆகையால் இந்திய பிரதமர் மோடி சீனாவிடமிருந்து எமது மீனவர்களை பாதுகாக்க உதவவேண்டும்.

டக்ளசுடன் மீனவர்கள் சிலர் இந்தியா செல்லவிருப்பதாக தெரியவருகிறது. அவர்கள் மீனவர்கள் இல்லை கட்சி உறுப்பினர்கள் இது ஏமாற்று வேலை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.