இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அராலி மூலக்கிளை கூட்டம்

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அராலி மூலக்கிளை கூட்டம் இன்று இடம்பெற்றது.

 

அதில்கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

 

( உப்பு சப்பு இல்லாத 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பிலேயே இரு நாட்டு தலைவர்களும் பேசியுள்ளார்கள்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் குறித்து பேசியிருக்கிறார்.மகிந்த 13 பிளஸ் பிளஸ் என்று கருத்து கூறி இந்திய பிரதமர் இலங்கையை விட்டு செல்லமுன்பே அவ்வாறு கூறவில்லை என தெரிவித்தார்.அதே போல தமிழர்கள் கோரிக்கை நியாயம் என குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க இன்று பொலிஸ் அதிகாரத்தை விடுத்து பேசுகின்றார்.

 

இன்று ரணில் விக்கிரமசிங்க தனித்தனியாக கட்சிகளை அழைத்து பேசுகின்றார்.இருக்கின்ற கட்சிகளையும் உடைத்து இன்னும் தமிழருக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதே அவரது நோக்கம் .கட்சிகளை பிரிப்பதில் கைதேர்ந்தவர் ரணில் விக்கிரமசிங்க .விடுதலைப்புலிகளை உடைத்து கருணாவை வெளியே எடுத்தவரும் அவரே தனது வாயாலே அதனை ஒத்துக்கொண்டார். வழைமையான அரசியல்வாதிகளை விட புத்திசாலி.

தமிழ் கட்சிகளை சந்திக்கும் பொழுது கடிதம் வாங்குகின்றார் ஆனால் அதனை வாசிப்பாரா என்பது கேள்விக்குறி.

 

 

இங்கே நாம் கவலைப்படவேண்டிய விடயம் என்னவென்று சொன்னால் நாம் இன்றும் இந்தியாவை நம்புகின்றோம் .நம்பிக்கொண்டிருக்கின்றோம்.பூகோள அரசியலை மையப்படுத்தி இலங்கை அரசாங்கத்தை நோகாது இந்திய அரசு தனது நலனை காய் நகர்த்துகின்றது.தமிழினம் அதிகாரமற்று வடக்கு கிழக்கில் இருக்கின்றது.இலங்கையை சீனாவும் கையாளளுகின்றது இந்தியாவும் கையாளுகின்றது.ஏன் நாம் வேறு நாடுகளிடம் உதவி கேட்க முடியாதா?நாம் முற்று முழுதாக இந்தியாவை தான் நம்பிக்கொண்டிருந்தோம்.வேறு நாடுகளுடன் எங்களை தொடர்புறுத்துவது யார் ?

 

ஆகவே பொறுமைக்கும் எல்லையுண்டு பொறுமையிழந்தே போராடினோம் சர்வதேச நாடுகள் இணைந்து எம்மை மௌனித்தன.எதையும் தமிழர்களுக்கு கொடுக்க கூடாது என்பதில் சிங்கள தரப்புக்கள் தெளிவாக இருக்கின்றன.பல தமிழ்கட்சிகள் இன்று வெளிப்படையாக உண்மையை பேச மறுக்கின்றார்கள்.தெட்ட தெளிவாக எமக்கு தெரியும் இவர்கள் எமக்கு ஒன்றையும் வழங்போவது கிடையாது.13 ஆவது திருத்தத்தையே இல்லாதொழிக்க பாடுபடுகின்றார்கள்.

 

மேலும் இதே இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் போர் இடம்பெறும் பொழுது பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு எரிபொருள் ஏற்றி அனுப்பி வைத்ததும் இலங்கை தான்.அதே போல சீன நலத்திட்டங்களை இந்தியாவுக்காக திருப்பினுப்பியதும் இலங்கை தான் இங்கே பூகோள அரசியலே பிரதானமடைகின்றது மாறாக தமிழர்களுக்கு தீர்வுகள் கிடைப்பது என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.