கதிரவெளி விக்னேஸ்வரா மகாவித்தி நூற்றாண்டு விழா

 

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய நூற்றாண்டு விழா வித்தியாலய அதிபர் எஸ்.அரசரெட்ணம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டு கல்வி, கலை, கலாசாரம், விளையாட்டு என பல துறைகளிலும் தமது சாதனைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அதிதிகள் கௌரவிப்பின் போது நூற்றாண்டு நினைவு மலரான ‘கதிராழி’ எனப்படும் நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

மேலும் குறித்த பாடசாலையில் நிலவிவரும் பௌதீக மற்றும் மனிதவள தேவைகள் தொடர்பிலும், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும் அந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருடன் இணைந்து ஆராய்ந்தனர்.

மேலும் இந்த நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், பூ.பிரசாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஆனந்தரூபன் உட்பட பிரதேச செயலாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.