ஜே.எம். மீடியா கல்லூரியின் பட்டமளிப்புவிழா கொழும்பில்

மாவனல்லை ஜே.எம். மீடியா கல்லூரியின் 4 ஆவது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஜே.எம். மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் ஸ்தாகரும் முகாமைத்துவப் பணிப்பாளரும் ஊடகவியலாளரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான ராஷிட் மல்ஹர்தீன் தலைமையிலும், பொது முகாமையாளர் மென் பொருளியலாளர் ரஸா மல்ஹர்தீனின் வழிகாட்டலிலும் இந்த நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக துறை பிரிவான ஸ்ரீபாலி வளாகத்தின் வெகுஜன ஊடகத்துறை பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பிரதீப் வீரசிங்க கலந்துகொண்டார்.

கௌரவ அதீதியாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் கலந்துகொண்டார். மற்றும் அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ், ஊடகவியலாளர் ரினோஸா நொஷாட், சாதிக் சிஹான் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் 3 மாத கால ஊடக கற்கையை நிறைவுசெய்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமது சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் ஊடகத்துறையின் முக்கியத்துவம் குறித்தும் ஊடக ஒழுக்கங்களுடன் கூடிய ஊடகவியலின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜே.எம்.மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியானது கடந்த 10 வருடங்களாக இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. மேலும், மும்மொழிகளிலும் பிரயோக ரீதியில் ஊடக கற்கை நெறியை மிகச் சிறப்பாக வழங்கும் அரச டிவெக் அங்கீகாரம் பெற்ற ஒரே ஓர் ஊடக கல்லூரியாகவும் திகழ்கின்றதோடு, ஊடக கற்கை நெறியின் 14 ஆவது குழு மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.