அன்று அச்சமடைந்தோம்; கிராமங்களுக்குகூட செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதாம்! உண்மையை ஒப்புக்கொண்டார் திஸாநாயக்க

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் போட்டியிடுவோம். நாம் தேர்தல் தொடர்பில் அச்சமடையவில்லை.

அன்று அச்சமடைந்தோம். அச்சத்தோடு மாத்திரம் இருக்கவில்லை. கிராமங்களுக்குக் கூட  செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

இந்த நிலைமை தற்போது அவ்வாறில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

இதன்போது கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க  சந்திப்பின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற ரீதியில் பொறுப்புகளை சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்குமாறும் கோரினோம். இருப்பினும் அவர்கள் வழங்கவில்லை.

இது தொடர்பில் நாம் கவலையடைகிறோம். தற்போது நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களுக்கு வலு சேர்க்கும் நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம்.

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் போட்டியிடுவோம். மேலும் நாம் தேர்தல் தொடர்பில் அச்சமடையவில்லை.

இருப்பினும் நாம் அச்சமடைந்தோம். அச்சத்தோடு மாத்திரம் இருக்கவில்லை. கிராமங்களுக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

மரண வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது. தற்போது அவ்வாறில்லை. எமது தரப்பினர்கள் சுதந்திரமாக கிராமங்களுக்கு சென்று மக்களுடன் வாழ்கின்றனர். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.