இலங்கைக்குத் தொடர்ந்தும் உறுதியான ஆதரவை வழங்கிவரும் சீனாவிற்கு நன்றி கமால் குணரட்ண பாராட்டு

இலங்கைக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கிவருவதற்காக சீனாவிற்கு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண நன்றியை தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு  எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவேளை சீனா உண்மையான நண்பனாக விளங்கியது. தோளோடு தோள்நின்றது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீனா எமக்கு அவசியமான புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஆதரவை வழங்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா இராணுவத்தின் 96வருட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையும் சீனாவும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரதன்மை குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளன என கமல்குணரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.