யாழில் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான, மீளப்பெறமுடியாத அதிகார பகிர்வான சமஷ்டியை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக திங்கட்கிழமை (31) காலை கூடிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது.















கருத்துக்களேதுமில்லை