நீர்க்கட்டணம் அதிகரிப்பு – வெளியானது வர்த்தமானி

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது நேற்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகள், பாடசாலைகள், மதஸ்தலங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நீர்க்கட்டண அதிகரிப்பு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0 முதல் 5 வரையான அலகொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளது.

அத்துடன், 06 முதல் 10 வரையான அலகொன்று 80 ரூபாவினால் அதிகரிக்கட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 400 ரூபா அறிவிடப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.