வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ நடை பவணி இன்று மிகிந்தலையில்

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைபவனி, இன்றைய தினம் மிகிந்தலை வரை இடம்பெறவுள்ளது.

வவுனியா – செட்டிக்குளம் பகுதியிலிருந்து நேற்று காலை ஆரம்பமான இந்த நடைபயணம் நேற்று மதியம் மதவாச்சியை சென்றடைந்தது.

அதேநேரம் தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி நேற்றைய தினம் மதவாச்சியை சென்றடைந்தது.

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் ‘முன்னெடுக்கப்படும் மலையகம் 200’எனும்  குறித்த நடை பவணி இன்று ஒன்பதாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.