சாய்ந்தமருது ரியாழுல் ஜன்னா வித்தியாலய புதிய அதிபராக எம்.ஏ.அஸ்தர் பொறுப்பேற்பு!

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃ ரியாழுல் ஜன்னா வித்தியாலய புதிய அதிபராக கல்முனை கல்வி வலய கல்முனை கமுஃகமுஃஅல்- பஹ்ரியா மகா வித்தியாலய பதில் அதிபராகவும் மற்றும் பிரதியதிபராகவும் கடமையாற்றிய இலங்கை அதிபர் சேவை தரத்தை உடைய எம்.ஏ. அஸ்தர் சாய்ந்தமருது மற்றும் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரிகள் முன்னிலையில் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் புடைசூழ உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ. ஜீ. திஸாநாயக்க மற்றும் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் ஆகியோரின் கடிதத்தின் பிரகாரம் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும், கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான என்.எம்.ஏ. மலீக் பாடசாலையின் தற்காலிய அதிபராக கடமையாற்றிய அதிபர் எஸ்.அல் சப்ரி இடமிருந்து புதிய அதிபருக்கான பொறுப்புகளை பெற்றுக் கையளித்தார்.

புதிய அதிபர் பொறுப்புக்களை கையேற்ற இந்நிகழ்வில் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியும், கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ், கல்முனை சட்டத்தரணிகள் சங்க உதவி தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சாரிக் காரியப்பர், சாய்ந்தமருது கமுஃகமுஃ ரியாழுல் ஜன்னா வித்தியாலய முன்னாள் அதிபர்கள், காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது கோட்டங்களின் அதிபர்கள், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், புதிய அதிபரின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.