சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் வாழ்வகத்துக்கு சேவைத் திட்டம்!

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாக பதவியேற்பு ஞாயிற்றுக்கிழமை கழகத் தலைவர் லயன் க.டினேஷ் தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் புதிய தலைவராக வலி.வடக்கு பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் லயன் செ.விpஜயராஜ் பதவியேற்றார்.

நிகழ்வில் பிரதமவிருந்தினராக அனைத்து மாவட்ட லயன்ஸ் கழகங்களின் முன்னாள் தலைவரும் நீர்கொழும்பு கோல்டன் ஸ்ரார் பீச் ஹோட்டலின் நிர்வாக இயக்குநருமாகிய லயன் தேவா டி பீற்றர் – லயன் ஜசிந்தா பீற்றர் ஆகியோரும், சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கழக ஆளுநர் சபை ஆலோசகரும், கொமர்சல் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநருமாகிய லயன் சிவ.ரங்கநாதன் – லயன் கெலனி தம்பதிகளும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் புதிதாக தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட லயன் செ.விஜயராஜ், சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்றோர் நிலையத்துக்கு ஒருநேர மதிய உணவுக்கான காசோலையை வாழ்வகத் தலைவர் ஓய்வுநிலை விரிவுரையாளர் ஆ.இரவீந்திரனிடம் வழங்கிவைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.