நாட்டில் தொடரும் கணவன் மனைவி கொலைக் கலாசாரம் – மனைவியை சுடடுக்கொன்று விட்டு தற்கொலை
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குடும்பத் தகராறுகள் காரணமாக இளம் குடும்பங்களைச் சேர்ந்த கணவன், மனைவி தற்கொலை செய்வதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில் நுவரெலியாவில் பதைபதைக்கும் சம்பவம் ஒன்று நேற்றிரவு பதிவாகியுள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிவடைந்துள்ளது.
முரண்பாடு அதிகரித்த நிலையில், கணவன், 26 வயதுடைய மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் 28 வயதுடைய கணவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நுவரெலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (07) இரவு பதிவாகியுள்ளது.
பொலிஸார் மேற்க்கொண்ட விசாரணையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைக் கொண்டே கணவர் சுட்டது தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் துரிதகதியில் மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மை ரிப்போட் தொகுப்பு – ஆருடன்












கருத்துக்களேதுமில்லை