கிழக்கு மாகாண ஆளுநரின் செயல்பாடுகள் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணம்! ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் பாராட்டு

 

நூருல் ஹூதா உமர்

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களின், உணவு பாதுகாப்பு கூட்டம் கடந்த இரண்டு நாள்களாக பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர்கள், அந்தந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, ஆளுநர் செயலகத்துக்கு விஜயம் செய்த பிரதமர், செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்று இரண்டு மாதகாலங்களில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக 700 ஆசிரியர் நியமனம், 5000 இளைஞர்களுக்கு தகவல் தொipநுட்ப வேலைவாய்ப்பு, இந்திய அரசிடமிருந்து 2371 மில்லியன் கடனற்ற நிதியுதவி, ஜப்பான் அரசுடன் இணைந்து அருகம்பேவில் உலாவுதல் ஆரம்பித்தல், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்தல்,கிழக்கு மாகாணத்திற்கு முதல் முறையாக கோர்டிலா குரூஸ் கப்பலை வரவழைத்தமை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி உரிமை பெற்றுக்கொடுத்தமை, பீச் கிளீனிங் வேலைத்திட்டத்தின் ஊடாக ஐம்பதாயிரம் பிளாஸ்டிக் கழிவு பொருள்கள்,ஒரு லட்சம் பிளாஸ்டிக் அல்லாத கழிவு பொருள்கள் அகற்றப்பட்டு கடற்கரைகள் சுத்தம் செய்யப்பட்டமை, சட்ட ஒழுங்கை சீராக செயற்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், ஆளுநர் மத சார்பற்ற வகையில் நியாயமான முடிவுகளை அனைவருக்கும் உதவும் வகையில் செயற்படுகிறார் எனவும் அறிய கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட மீளாய்வு கூட்டத்தில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நியாமான விடயங்கள் புறக்கணிக்கப்பட்டன. மக்கள் பிரதிநிதியாக குரல் எழுப்பியும் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படவில்லை, ஆனால் ஆளுநராக செந்தில் தொண்டமான் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, ஓரளவேனும் நியாயமான முறையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தக்கூடியதாக உள்ளது என சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.