உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

உணவு பற்றாக்குறையை எதிர்நோக்கிய மக்களிற்கான உலக உணவுத் திட்டத்தின் ஊடாக உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு வைரவபுளியங்குளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று (08) இடம்பெற்றது.

இதன்போது பண்டாரிக்குளம் கிராம சேவகர் பிரிவில் 392 குடும்பங்களுக்கு 50 கிலோ அரிசி, 20 கிலோ பருப்பு, 05 லீற்றர் பாம் ஒயில் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

அதேசமயம் வவுனியா பிரதேச செயலக பிரிவின் கீழ், நீண்ட காலமாக நோய்வாய்க்குட்பட்டவர்கள் , கணவனை இழந்த பெண்கள் , கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், இவ்வாறான ஆறு பிரிவுகளைச் சேர்ந்த 13,152 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், திட்டமிடல் பணிப்பாளர் முகுந்தன், உதவி திட்டமிடல். பணிப்பாளர் பிறைசூடி மற்றும் அரச உயர் அதிகாரிகள் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.