யாழில் காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது

யாழில் ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஒருவரிடம் 62 இலட்ச ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு பணத்திற்கு பதிலாகக் காசோலையொன்றைக் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வாகனத்தினை விற்ற நபர் , காசோலையை வங்கியில் வைப்பிலிட்ட போது , அக் கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பியுள்ளது.

அதேவேளை வாகனத்தை வாங்கிய நபர் , வாகனத்தோடு தலைமறைவாகி இருந்த நிலையில் , வாகனத்தை விற்றவர் இது தொடர்பில் , யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காசோலை மோசடி செய்தவரை சுமார் ஓராண்டு கால பகுதிக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் வாங்கிய வாகனம் மாவிட்டபுரம் பகுதியில் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் மின்னொழுக்கு ஏற்பட்டு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து நேற்று (07) யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.