கொழும்பில் துயரம் – தமிழ் மாணவி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – கொலன்னாவைப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் சுரேந்திரன் கவிதா (வயது – 15) என்ற மாணவியை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.